சென்னை: திரைத்துறையில் காட்டுத்தீ போல பரவிடும் வீடியோ பைரசியை அடியோடு ஒழிக்க வேண்டியது கட்டாயம் என்று நீதிபதி இளந்திரையன் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்புடையவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் உள்ளது. மேலும் தொழில்நுட்பத்தை மூலதனமாக கொண்டு நடந்துவரும் பைரசியை ஒழிக்க வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.