ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை 2வது இடத்தில் இந்திய அணி: விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பூம்ரா நம்பர் 1

துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளைக் குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன்  2வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகளுடன் முறையே 3வது, 4வது இடங்களில்  உள்ளன.

பாகிஸ்தான் (102), ஆஸ்திரேலியா (100) அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (887) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சக வீரர்  ரோகித் ஷர்மா (854), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (821) அடுத்த இடங்களில் உள்ளனர்.

 இந்திய அணி விக்கெட் கீப்பர் டோனி 3 இடம் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார்.பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா (808)முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சக இந்திய வீரர்கள் குல்தீப் 4வது. சாஹல் 5வது இடத்திலும்,  புவனேஷ்வர் குமார் 17வது இடத்திலும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் சுழல் ரஷித் கான் (788) 2வது இடத்திலும், நியூசி. வேகம் டிரென்ட் போல்ட் (732) அடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். நம்பர் 1 ஆல்ரவுண்டர் அந்தஸ்தை ரஷித் கான் தக்கவைத்துக்  கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: