இடைக்கால பட்ஜெட் வணிகர்களுக்கு நன்மை பயக்காது: விக்கிரமராஜா கருத்து

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: வணிகர் சங்கங்களின் பல கோரிக்கைகளை பட்ஜெட்டில் நிராகரித்திருப்பது, அரசு வணிகர்களை உதாசீனப்படுத்துகிறது என்றே எண்ண தோன்றுகிறது.

60 வயது கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம், அகில இந்திய வணிகர் கவுன்சில் அமைத்தல், ஸ்மார்ட் சிட்டி, சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் நில ஆர்ஜிதம் செய்யும்போது பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மாற்று  இடங்களும் உரிய இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்று பல்வேறு கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட் வணிகர்களுக்கு பெரிய அளவில் நன்மை பயக்காது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: