அமேசானில் ரூ.30 லட்சம் மோசடி கண்டுபிடிப்பு... இந்தூரைச் சேர்ந்த ஒருவர் கைது

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் மாளவ பீடபூமியில் உள்ள இந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் போலி கணக்குத் தொடங்கி சுமார் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசானில் பொருட்களை வாங்கி, பார்சலில் ஒன்றும் இல்லை எனக் கூறி  பணத்தை திரும்பப் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முகமது மகுவாலா  என்பவர் அமேசானில் ஏராளமான போலியான இ-மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுத்து போலியான கணக்கு தொடங்கி உள்ளார். அதன் மூலம் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள், மின்சாதனப் பொருட்களை வாங்கியுள்ளார். மேலும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். பின்னர் அமேசான் அனுப்பிய பார்சல் காலியாக இருந்ததாகக் கூறி பணத்தை திரும்பப் பெறுவதை இவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

புகார்கள் அதிக அளவில் வந்ததால் அமேசான் நிறுவனம் சார்பில் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரை அடுத்து போலீசார், முகமது மகுவாலாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அமேசானிடம் இருந்து ரூ.30 லட்சம் வரை அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: