காந்தி நினைவு தினம் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.  அகிம்சை வழியில் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசப்பிதா மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மறைந்த மகாத்மா காந்தியின் 72வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவின்  நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மகாத்மாவின் புண்ணிய திதியில் அவரை நினைவு கூறுவோம். அவர் காட்டிய வழிகளை பின்பற்றவும், அவரது மதிப்புக்களை எடுத்துரைக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியாவிற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகத்துக்கு நாடு என்றென்றும் நன்றி செலுத்தும்’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: