ஏரியில் அடுக்குமாடி கட்டிடம் முதல்வர், கலெக்டர் மீது ஐகோர்ட் நடவடிக்கை எடுக்குமா? : முத்தரசன் கேள்வி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சேலத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் சேலத்தாம்பட்டி ஏரியை தூற்று, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான ஏற்பாட்டை, அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். பொதுமக்கள் ஏரியை தூர்த்த கூடாது என போராடினார்கள். போராடும் பொதுமக்களை காவல்துறை துணையோடு அடக்கி அச்சுறுத்தி நூற்றுக்கணக்கான லாரிகளில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு, 300 ஏக்கர் பரப்பளவு ஏரி, தூர்த்தப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளும் மின்னல் வேகத்தில் நடக்கிறது.

300 ஏக்கர் பரப்பளவு ஏரியை பாதுகாக்க வேண்டிய முதல்வரும், கலெக்டரும் முன் நின்று தூர்த்து வருகிறார்கள். இவர்கள் மீது உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்குமா, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுமா, உயர் நீதிமன்ற உத்தரவு சாதாரண மக்களுக்கு தானா, அரசுக்கு பொருந்தாதா என்ற கேள்வி எழுகிறது. உயர் நீதிமன்றம் சேலத்தாம்பட்டி ஏரி தூர்க்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஏரியை பாதுகாக்கவும், தூர்த்து போக காரணமாக இருந்த சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: