ஜார்கண்டில் பதுங்கியிருந்த 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் குந்தி மாவட்டத்தின் முர்ஹூ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  நக்சல்கள் பதுங்கி இருந்தனர். இது குறித்த ரகசிய  தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அதிரடி கமாண்டோ பட்டாலியன் மற்றும் சிறப்பு படை, மாவட்ட  போலீசார் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு  நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு நக்சல்கள் படுகாயம் அடைந்தனர்.

அப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில், ஏகே 47 ரக துப்பாக்கிகள், ரைபிள், நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை  கைப்பற்றினர். கொல்லப்பட்ட நக்சல்கள், ‘இந்திய மக்கள் விடுதலை முன்னணி’ என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில்  தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை இன்ஸ்பெக்டர் ெஜனரல் ஆசிஷ் பாத்ரா கூறுகையில், “பாதுகாப்பு படை தாக்குதலில் 5 நக்சல்கள்  கொல்லப்பட்டனர். காயமடைந்த இரண்டு நக்சல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லடேகர் மாவட்டத்தின் குமாந்தி  பகுதியிலும் நக்சல்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கும் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: