செவ்வாய் கிரகத்தில் புயலில் சிக்கிய ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டதாக நாசா தகவல்

வாஷிங்க்டன் : செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர் விண்கலம் தற்போது முழுமையாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் முதன் முதலில் தடம் பதித்த இந்த ரோவர், லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. அத்துடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆபர்ச்சுனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகம் சார்ந்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வந்தது.

புயலில் சிக்கிய விண்கலம் செயலிழந்து விட்டது

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்த ரோவர் காணாமல் போனது. செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலில் சிக்கிய அந்த விண்கலம் புயலுக்கு பிறகு காணாமல் போனது. அந்த விண்கலம் எங்குள்ளது என்ற விவரம் தெரியாமல் நாசா விஞ்ஞானிகள் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால் புயலின் வேகம் குறைந்து சராசரி நிலையை எட்டிய போது, ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முழுமையாக செயலிழந்து விட்டதாகவும் அதனுடைய சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: