ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அமைச்சர் பியூஸ் கோயலிடம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு

புதுடெல்லி: நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால், அவரிடம் இருந்த நிதியமைச்சகம் மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்ப்டடுள்ளது.   நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி சில மாதங்களுக்கு முன்பு சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரிடம் இருந்த நிதியமைச்சக பொறுப்பு, ரயில்வே அமைச்சராக இருந்த பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அருண் ஜெட்லி உடல் நலம் பெற்று மீண்டுக்கு பணிக்கு திரும்பி நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அவர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை, அவரிடம் உள்ள நிதியமைச்சகம் மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்ப்டடுள்ளது. அருண் ஜெட்லி மீண்டும் பணிக்கும் திரும்பும் வரை இந்த பொறுப்புகளை பியூஸ் கோயல் தற்காலிகமாக கவனிப்பார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்தார். சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி மீண்டும் பணிக்கு திரும்பும் வரை அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: