ஏர் இந்தியா முன்னாள் தலைவர் அரவிந்த் ஜாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அரவிந்த் ஜாதவ்  மற்றும் மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ். இவர் கடந்த 2009-2010ம் ஆண்டுகளில், பொது மேலாளர் பதவிக்கு காத்பாலியா, அமிதாப் சிங், ரோஹித் பாசின் உள்பட 5 பேரை நியமிக்க பரிந்துரைத்தார். இவர்களில் காத்பாலியா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த போதும், லஞ்ச ஒழிப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமிதாப் சிங், பாசின் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கும் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி சிபிஐ விசாரித்து வந்தது. இதன் ஆரம்பக்கட்ட விசாரணை முடிந்த நிலையில், அரவிந்த் ஜாதவ், ஏர் இந்தியா மருத்துவப் பிரிவின் அப்போதைய பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற எல்.பி. நக்வா, அப்போதைய கூடுதல் பொது மேலாளர்களாக பதவி வகித்த காத்பாலியா, அமிதாப் சிங், ரோஹித் பாசின் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் தண்டனை, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: