நாடு முழுவதும் கடந்த 15 மாதங்களில் 73. 50 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு : வருங்கால வைப்பு நிதி அமைப்பு

டெல்லி : நாடு முழுவதும் கடந்த 15 மாதங்களில் 73. 50 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ம் ஆண்டு நவம்பர் வரையிலான காலக் கட்டத்தில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்தவர்கள் குறித்த பட்டியலை வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 15 மாத காலத்தில் புதிதாக 73.50 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 73.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 7.32 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.  இது கடந்த 15 மாதங்களில் இல்லாத உயர்வாகும். மேலும் முந்தைய ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வேலை வாய்ப்பை விட 48% அதிகரித்துள்ளதாகவும் வருங்கால வைப்புநிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மிகவும்  குறைந்த பட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் 55,831பேர் மட்டுமே புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: