ஜனநாயகத்துக்கு களங்கம் விளைவிக்கவே வாக்கு எந்திர செயல்முறை விளக்கம் செய்யப்பட்டது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரம் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். ஜனநாயகத்துக்கு களங்கம் விளைவிக்கவே வாக்கு எந்திர செயல்முறை விளக்கம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியால் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம் என்று அமைச்சர் ரவிசங்கர் குற்றம் சாட்டினார். இந்த செயல்முறை விளக்கம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என கூறினார். மேலும் வாக்கு எந்திர செயல்முறை விளக்கத்தில் கபில் சிபில் கலந்து கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு களங்கம் விளைவிக்கவே காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: