கோஹ்லி சாதனையை முறியடித்தார் அம்லா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் அம்லா, இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் ஒரு சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக 27 சதம் அடித்த  வீரர் என்ற சாதனை கோஹ்லி வசம் இருந்தது. அவர் 169 இன்னிங்சில் இந்த சாதனை மைல் கல்லை எட்டியிருந்தார். அம்லா தனது 167வது இன்னிங்சில் 27வது சதத்தை நிறைவு செய்து கோஹ்லியின் சாதனையை  முந்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி இதுவரை 39 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: