தமிழகத்தில் இருந்து சப்ளை வயலுக்கு பூச்சி மருந்து அடித்த 2 பேர் சாவு

திருவனவந்தபுரம்: கேரளாவில் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த 2 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர்.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் செறுவல்லா அருகே பெரிங்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சனல்குமார்(42), தங்கச்சன் (68). இருவரும் விவசாயிகள். நேற்று முன்தினம் அங்குள்ள வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து  அடிக்க இருவரும் சென்றனர். சனல்குமார் மோட்டார் இயந்திரத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தார். அவருக்கு அருகே தங்கச்சன் உள்பட 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.திடீரென 6 பேரும் மயங்கி விழுந்தனர். இதை கண்ட அந்த பகுதியினர் விரைந்து சென்று 6 பேரையும் மீட்டு சங்கனாசேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கச்சன், சனல்குமார் பரிதாபமாக  இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் திருவல்லா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கேரளாவில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் இந்த பூச்சி மருந்ைத குறைந்த விலையில் தமிழ்நாட்டில் இருந்து வாங்கி  வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக கேரளா விவசாயத்துறை விசாரணை நடத்து வருகிறது.இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர், திருவல்லா டிஎஸ்பி மற்றும் விவசாய துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள மனித உரிமை  ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: