3 நாட்களுக்கு வறண்ட வானிலை: இரவில் பனிப்பொழிவு நீடிக்கும்

சென்னை: வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகு தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர்காற்று வீசிவருகிறது. இரவிலும் கடுமையான பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இமய மலைப் பகுதியில் நிலவும் குறைந்த அளவு வெப்பம் காரணமாக நாடு முழுவதும் குளிர் காற்று வீசுகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரியில் இரவில் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் குறைந்த பட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்பதால்  கடுமையான பனிப்பொழிவு இருக்கும். நீலகிரி உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் உறை பனியும் இருக்கும். இந்நிலையில் கடல் பகுதியில் இருந்து குளிர் காற்று வீசுவதால் இரவில் கடுமையான பனிபொழிவுடன், குளிர் காற்றும் வீசும். காலை 9 மணி வரைக்கும் பனிப்பொழிவு நீடிக்கும். பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும். பின்னர் காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

Advertising
Advertising

மருத்துவமனைகளுக்கு படையெடுப்பு...

தமிழகம் முழுவதும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. மாலை, 5 மணிக்கு துவங்கி மறுநாள் காலை, 9 மணி வரை பனி நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் உள்ளிட்ட சொந்த வேலைகளுக்காக வெளியில் செல்வோர், கடும் பனியிலேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் ஆங்காங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். இதனால் பெரும்பாலான அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: