சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூருக்கு மாற்றம்: மத்திய அரசிடம் சுப்ரீம்கோர்ட் கருத்து கேட்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரனை மணிப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் எம்.வி.முரளிதரன். வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள மணியம்பட்டு கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 1990ல் சட்டப் படிப்பை முடித்த  இவர் 2016 ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் மற்றும் அரசியலமைப்பில் சிறந்து விளங்கிய இவர் கடந்த 2 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஒக்கி மற்றும் கஜா புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு  உதவிகளைச் செய்துள்ளார். இந்நிலையில், இவரை மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கருத்துரு அனுப்பியுள்ளது.  மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: