ஜி.எஸ்.டி வரி கோரிக்கைகள் ஏற்பு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி: விக்கிரமராஜா அறிக்கை

சென்னை: ஜி.எஸ்.டி கவுன்சிலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் மூலமாக பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் பல கோரிக்கைகளுக்கு டெல்லியில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டன. குறிப்பாக, ஜி.எஸ்.டி பதிவு உச்சவரம்பு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது சுமார் 11 லட்சம் வணிகர்களுக்கு பயனளிக்கும்.

இந்த ஜி.எஸ்.டி வரி தளர்வுகள் முறைப்படுத்த உதவிகரமாக இருந்த அமைச்சர் ஜெயக்குமார், ஜி.எஸ்.டி துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், பல வரி குறைப்புக்கான கோரிக்கைகள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளது போல பல பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வாடகை கட்டிடங்களில் இயங்கும் உணவகங்களில் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி என்பது இயற்கை நீதிக்கு முரணானது மட்டுமல்ல, சேவை தொழிலிலுள்ள உணவகங்களை தண்டிப்பது போலாகும். எனவே, உணவக வாடகை கட்டிடங்கள் மீதான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டு 5 சதவிகிதம் என அறிவிக்கப்பட வேண்டும். உணவகங்களில் அவுட்டோர் கேட்டரிங் உணவுப்பொருட்களுக்கு மற்ற உணவுப்பொருள் போலவே 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியே விதிக்கப்பட வேண்டும். எனவே, வணிகர்களின் நிலுவையில் இருக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: