டெல்லி காங். தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவர் பதவிக்கு, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அஜய் மாகென் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.  இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் தலைமை மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதன் ஒருபகுதியாக ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசுடன் நெருங்கி வந்தது. ஆனால், இதற்கு எதிரான மனநிலையில் மாகென் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப ஆம் ஆத்மி அரசை கடுமையாக எதிர்த்து வந்தார்.  இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக 80 வயதான ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் மாநில ெபாறுப்பாளர் பி சி சாக்கோ, ஷீலா தீட்சித்திற்கு உதவ மூன்று செயல் தலைவர்கள் நியமிக்கப்படுவதாகவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: