கோலாலம்பூர்: ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்பே மலேசிய மன்னர் முகமது நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மலேசிய மன்னராக முகமது இருந்தார். இவர் 2 மாத மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் ரஷ்யாவில் திருமணம் முடித்ததாக சமூகவலை தளங்களில் போட்டோக்கள் வெளியாயின. ஆனால் இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் மன்னர் முகமது கடந்த வாரம் தனது பணிகளை மீண்டும் தொடங்கினார்.