பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிவு... பயணிகள் அதிர்ச்சி

கொல்கத்தா: பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடு வானில் எரிபொருள் கசிந்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கு, நேற்று இரவு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நேற்று பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI 335 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சேமிப்பகத்தில் இருந்து எரிபொருள் கசிந்ததால் அருகிலிருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்று இரவு 10.35 மணியளவில் அந்த விமானத்துக்கு முன்னுரிமை கொடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்க வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதித்தது.

அடிக்கடி பழுதாகும் A320 நியோ எஞ்சின் கொண்ட அந்த விமானத்தின் எரிபொருள் சேமிப்பகத்தில் இருந்து எரிபொருள் கசிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பயணிகள் நள்ளிரவு இரண்டரை மணியளவில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சோதனை மற்றும் பராமரிப்பிற்குப் பின், அந்த விமானம் இன்று காலை மீண்டும் கொல்கத்தாவில் இருந்து மும்பை வழித்தடத்தில் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: