பேரவையில் தமிழக ஆளுநர் உரை 2ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 2ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்துகிறார். இதையடுத்து 2ம் தேதி மாலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில்  நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்தமிழக சட்டப் பேரவையின் 2019ம் ஆண்டு முதல் கூட்டம் வருகிற 2ம் தேதி நடை பெறுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கூட்டத் தொடரை தொடங்கி வைக்கிறார். மறைந்த திமுக தலைவர்  கருணாநிதிக்கு 3ம் தேதி பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும் முதல்வரின் பதிலுரையும் இடம்பெறும். ஒரு  வாரகாலம் பேரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் உரையில் தமிழக அரசின் புதிய திட்டங்கள் இதில் இடம் பெறும் என்று தெரிகிறது. இது தவிர ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்கப்படும் நிலை உருவாகியுள் ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதில் அந்த  மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் அரசின் மெத்தனப் போக்குக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கிராமநிர்வாக அதிகாரிகள் என்று அனைத்து தரப்பினரும் போராட்டக் களத்தில் குதித்து உள்ளனர். இதற்கிடையே பட்டாசு ஆலை தொழிலாளர்கள், பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்பட்ட  தொழிலாளர்கள், விளைநிலம் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் என்று தமிழ்நாடு போராட்டக் களமாக மாறியுள்ளது.இந்த சூழ்நிலையில் சட்டமன்றம் கூடுவது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைகளை திமுக, காங்கிரஸ் மற்றும் கட்சிகள் பேரவையில் கிளப்ப திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குட்கா ஊாழல் வழக்கில்  சிபிஐ விசாரணை தீவிரம், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணை, டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரவையில் திமுக சார்பில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள், அணுகவேண்டிய விதம் குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 2ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவரும் எதிர்க்கட்சி  தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.கூட்டம் குறித்து சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகசட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டம் வரும் 2ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளு மாறு கேட்டுக்  கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: