மலை ரயில் பயணிகள் புகார் கூற புதிய செயலி

குன்னூர்: ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் போது குற்றச் சம்பவங்கள் நடந்தால் அது குறித்து உடனுக்குடன் புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை ரயில்வே பாதுகாப்பு ஏடிஜிபி சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார்.நீலகிரி மாவட்டம், குன்னூர் ரயில் நிலையத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலை ரயிலில் இவர்கள் பயணம் செய்யும் போது, செல்போன், உடமைகள் அடிக்கடி திருடு போகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் உடமைகள் திருடு போவது குறித்து உடனுக்குடன் புகார் தர ‘ஜிஆர்பி ஹெல்ப்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இதன் மூலம் புகார் தெரிவித்தால் போலீசார் உடனுக்குடன் வந்து நடவடிக்கையில் ஈடுபடுவர். இந்த செயலியை நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஏடிஜிபி சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். இதைத்ெதாடர்ந்து அவர் கூறுகையில், மலை ரயில் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் புதிய கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மலை ரயிலில் பயணிகளிடம் திருடப்பட்ட 3 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: