நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்!: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்…சத்ய பிரதா சாகு அறிவிப்பு..!!

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வழக்கமாக பிரசாரத்தின் கடைசி நாளில் மாலை 5 மணி வரை மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்படும். தற்போது தமிழகத்தில் வெயில் கடுமையாக இருப்பதால் கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளும், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் ஒட்டக்கூடிய பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறக்கூடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக அமைச்சர் கடம்பூர் ராஜூ காரில் கைப்பற்றப்பட்ட பண விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்திருக்கிறார். கொரோனா பாதித்தவர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அவர்கள் தனிமையில் இருந்தாலோ, மருத்துவமனையில் இருந்தாலோ வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம் என்ற சூழல் இருக்கக்கூடிய பட்சத்தில் தனிப்பட்ட வாகனத்தில் வந்து வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. பணபரிமுதலை பொறுத்தவரையில் சேலம் முதலிடத்தில் இருக்கிறது. சேலத்தில் இதுவரை 42 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இறுதி இடத்தில் ராணிப்பேட்டை உள்ளது. …

The post நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்!: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்…சத்ய பிரதா சாகு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: