கடந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் மிக மோசமாக அமைந்திருந்ததாக ஐசிசி சான்றளித்தது. எனவே இம்முறை பந்துவீச்சு மற்றும் பேட்டிங்குக்கு சம விகிதத்தில் ஒத்துழைக்கும் ஆடுகளத்தை அமைக்க பராமரிப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தி உள்ளனர். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், வார இறுதி நாட்களில் ஆஸ்திரேலிய ரக்பி கால்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம் என்பதால் நிரந்தர பிட்ச் அமைக்கப்படுவது இல்லை. ஸ்டேடியத்துக்கு வெளியே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மிகக் கவனமாக தயாராகும் பிட்ச்கள், கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் பிரமாண்ட டிரக்குகளில் ஏற்றப்பட்டு அவற்றை அப்படியே ‘ரெடிமேட்’ ஆக மைதானத்துக்குள் கொண்டு வந்து பதித்து பராமரிக்கிறார்கள்.