சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்புக்கு ஜனவரி 16ல் செய்முறை தேர்வு

சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் ஜனவரி 16ல் தொடங்குகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு அட்டவணையில் சிபிஎஸ்இ மாற்றம் செய்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பில் தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தனியாகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு தனியாகவும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தொழில் கல்வி மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாதமே தொடங்க உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதம் நடக்கும்.

பொதுத் தேர்வுக்கான முழு அட்டவணை இன்னும் சிபிஎஸ்இ வெளியிடாத நிலையில், தற்ேபாது செய்முறைத் தேர்வுகளுக்கான தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதன்படி 2019 ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை பள்ளிகள் நடத்த வேண்டும். அலகாபாத்தில் கும்பமேளா நடப்பதை அடுத்து அங்கு மட்டும் ஜனவரி 1ம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்கும்.  இதையடுத்து, திறன் அடிப்படையிலான தேர்வுகள், பொதுப் பிரிவு பாடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் தொடங்கும்.

மேற்கண்ட பிரிவுகளில் குறைந்த அளவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி வாரத்தில் முடிக்க வேண்டும். மேலும், செய்முறைத் தேர்வுகள் நடத்தும்போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் இரண்டு பிரிவுகளாக பிரித்து காலை, மாலை என செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களை பள்ளிகள் மூலம் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: