கோவையில் 200 ஆண்டுகள் பழமையான போர்க்கருவிகளை சேகரிக்கும் இளைஞர்!

கோவை: நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்டவற்றை  சேகரிப்பவர்களுக்கு மத்தியில் கோவையை சேர்ந்த இளைஞர் போர்க்கருவிகளை சேகரித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ்குமார், இவர் கட்டுமான பொறியாளர். நாணயங்கள், தபால் தலைகள் சேகரிக்கும் பழக்கம் கொண்டிருந்த இவர் கடந்த 10 ஆண்டுகளில் போர்க்கருவிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விதவிதமான போர்க்கருவிகளை இவர் சேகரித்து வருகிறார். ஈட்டி, கேடையம், குத்து வால், வேட்டை கருவிகள் என 200 ஆண்டு வரலாற்றை இவர் ஆவணப்படுத்தி வருகிறார்.  

குறிப்பாக தமிழர்களின்  பண்டைய அரிய போர்க்கருவிகளை சேகரித்துள்ளார். கோவையை சேர்ந்த இந்த இளைஞர் மேலும் பல வகையான போர்க்கருவிகளை சேகரித்துள்ளார். அதுமட்டும் இன்றி சேகரிக்கப்பட்டுள்ள போர்க்கருவிகளின் பெயர்கள் மட்டும் பயன்பாட்டினை அறிந்து அதனை விலகியும் உள்ளார். இவரின் போர்க்கருவிகள் சேகரிக்கும் ஆர்வமிகுதியால் இவர் இத்தகைய போர்க்கருவிகளை சேகரித்துள்ளார். பெற்றோர் மற்றும் மனைவியின் ஆதரவால் இந்த பணியை செய்து வரும் ஜெயேஷ் குமார் இவற்றை கொண்டு அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.       

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: