வாகன ஓட்டிகளை ‘பந்தாடும்’ பாலமேடு சாலை; சீரமைக்க கோரிக்கை

வாடிப்பட்டி: வாடிப்பட்டியிலிருந்து பாலமேடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி-பாலமேடு சாலை முற்றிலும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய சாலையாகும். கச்சைகட்டி, ராமையன்பட்டி, எல்லையூர், மேட்டுப்பட்டி, தெத்தூர், கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட ஏனைய கிராம மக்கள் இச்சாலை வழியாக வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்ல முடியும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது இச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளது. கச்சைகட்டி கிராமத்தில் துவங்கும் குண்டும் குழியுமான சாலையானது சாத்தியாறு அணை வரை சுமார் 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் உள்ள மெகா பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மோசமான சாலை குறித்து எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வாதில்லை என புகார் கூறும் இப்பகுதி மக்கள் வாடிப்பட்டியிலிருந்து பாலமேடு செல்லும் சாலையை சீரமைத்து தர நெடுஞ்சாலைத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: