வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நாளை மறுநாள் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசியொட்டி முன்னதாக வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைபடுத்துதல்) நடப்பது வழக்கம்.

அதன்படி வரும் 18ம்தேதி வைகுண்ட ஏகாதசி, 19ம்தேதி துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் பரமபத வாயில் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்) காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதையடுத்து பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி அன்று அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: