லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலை., துணைவேந்தர் கணபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதற்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். லஞ்சம் வாங்கியதற்கு கணபதிக்கு எதிராக ஆதாரம் இருந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் செய்வதாக அவர் கூறியுள்ளார். பேராசிரியர் நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கணபதி கைது செய்யப்பட்டார்.

கடந்த 10 மாதங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் பங்குபெற்ற அமைச்சர்கள் விவரத்தை வெளியிடப்போவதாக கணபதி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணபதி மீதான லஞ்ச வழக்கை நீர்த்துப்போக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது எனவும் பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: