கோனார்க்கில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச மணல் சிற்பக் கண்காட்சி: பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துக் கொண்ட மணல் சிற்பிகள்

ஒடிசா: டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஒடிசாவின் பிரபலமான சூரியனார் கோவில் அருகே சண்ட்பகே கடற்கரை கோன் கார்டில் ஐந்து நாள் சர்வதேச மணல் சிற்ப கலை விழா நடைபெற்று வருகிறது. இந்த கலை விழாவின் பிராண்ட் தூதராக பட்நாயக் இருந்து வருகிறார். இந்த கலை விழாவில் ஜெர்மனி, மெக்ஸிகோ, கானா, சிங்கப்பூர், கனடா, ஸ்பெயின், இலங்கை மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து 18 பெண்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு மக்கள்  திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மணல் சிற்பிகள் கடற்கரை மணலில் தங்களின் கலைத்திறனைக் காட்டி விதவிதமான தோற்றங்களை கண்முன் நிறுத்தினர்.

சுதர்சன் பட்நாயக் உள்ளிட்டோரின் மணல் சிற்பங்கள் கண்களைக் கவர்ந்தன. காவிய பாத்திரங்கள் தத்ரூபமாக கண் முன் நடமாடுவது போல் இருந்தது. கதக் நடனம், ஒடிசி நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோனார்க் மணல் சிற்பக் கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியது. இதையடுத்து 5 நாள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். மேலும் இந்த இடத்தில் நடன நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பாட்டு நிகழ்ச்சி, மணல் சிற்பக்கலை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய சுற்றுலாத்தலமான  சூரியனார் கோவிலில் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் மக்கள் அனைவரும் இங்கு நடைபெறும் 5 நாள் விழாவை கண்டுகளித்து செல்வர். நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொள்வார்கள். அங்கு நடக்கும் அனைத்து காட்கிகள் மற்றும் மணல் சிற்பக்கலைகளை மக்கள் புகைப்படம் எடுத்து செல்வார்கள்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: