திருநங்கையுடன் புதரில் ஒதுங்கிய விவகாரம் போலீஸ்காரர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி

சென்னை:  துரைப்பாக்கம், காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணிபுரிபவர் சதீஷ் சத்யராஜ் (38). கடந்த 1ம் தேதி இரவு பணி முடிந்து, சதீஷ் சத்யராஜ் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அருகே வந்தபோது 2 திருநங்கைகள் புதரில் நிற்பதை கண்டு அவர்களை அழைத்து விசாரித்தார். பின்னர் அவர்களுடன் சதீஷ் சத்யராஜ் ஒதுங்கியதாக தெரிகிறது. இதை கண்டதும் வாகன ஓட்டிகள் பொதுமக்களுடன் சேர்ந்து போலீஸ்காரர் சதீஷ் சத்யராஜை சுற்றிவளைத்து பிடித்து, பள்ளிக்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் வீடியோவாக அனுப்பினர். இது, சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும், வைரலாக பரவியது. இதுகுறித்து, போலீஸ்காரர் சதீஷ்சத்யராஜிடம் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று, போலீஸ்காரர் சதீஷ் சத்யராஜை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். இவ்விவகாரம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: