இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் (37 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு இந்திய அணியில் (ஒருநாள் போட்டி) அறிமுகமான கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டியில் 4154 ரன் (அதிகம் 206, சராசரி 41.95, சதம் 9, அரை சதம் 22), 147 ஒருநாள் போட்டியில் 5238 ரன் (அதிகம் 150*, சராசரி 39.68, சதம் 11, அரை சதம் 34) மற்றும் 37 டி20ல் 932 ரன் (அதிகம் 75, சராசரி 27.41, அரை சதம் 7) விளாசி உள்ளார். ரஞ்சி கோப்பை உட்பட உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.