புவனேஸ்வர்,: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 7- 0 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை மிக எளிதாக வீழ்த்தியது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து இடைவேளையின்போது 3-0 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து கோல் மழை பொழிந்த அந்த அணி ஆட்ட நேர முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.