நிவாரண பொருட்கள் உடனடியாக அனுப்ப வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: நிவாரண பொருட்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரின் அறிக்கை: கஜா புயலால், பாதிக்கப்பட்டு, மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி அல்லல்பட்டு வருகின்றனர். உடுத்திருந்த ஆடைகள் தவிர மற்ற அனைத்தையும் இழந்து பரிதவித்து நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது ஒவ்வொருவரின் கடமையாகும். பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: