நாகை, பாம்பனில் கடல் உள்வாங்கியது மக்கள் அச்சம்

ராமேஸ்வரம்: கஜா புயல் எதிரொலியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் நேற்று 150 அடி தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். இதேபோல நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியில், லேசாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. மற்ற இடங்களில் கடல் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காட்சியளித்தது. கடல் சீற்றம் மட்டுமல்ல, அமைதியாக இருந்தாலும் ஆபத்துதான் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடலோரங்களில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ரயில் ரத்து: திருச்சி - ராமேஸ்வரம், மதுரை - ராமேஸ்வரம் இடையே பகல் நேரங்களில் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள் இன்று மட்டும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் சேது எக்ஸ்பிரஸ், போட்மெயில் ஆகிய 2 ரயில்களும் இன்று மானாமதுரையுடன் நிறுத்தப்பட்டு, மாலை அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து புறப்படும். இதுபோல் இன்று ராமேஸ்வரம் வரவேண்டிய ஓகா எக்ஸ்பிரஸ் மதுரையுடன் நிறுத்தப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: