கைதிகள் அறையில் சமையல் செய்வதாக புகார் சேலம் மத்திய சிறையில் டிஐஜி அதிரடி சோதனை: விறகு கட்ைடகள் பறிமுதல்

சேலம்: சேலம் மத்திய சிறையில் டிஐஜி நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் சமையல் செய்ய தயாராக வைத்திருந்த விறகு கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏராளமான கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், இதற்கு சில அதிகாரிகள் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வசதிபடைத்த கைதிகள் சிலர் இரவு நேரங்களில் தனியாக சமையல் செய்து சாப்பிடுவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை சரக சிறைத்துறை டிஐஜி அறிவுடைநம்பி நேற்றுமுன்தினம் மாலை சேலம் வந்தார். அவர் இரவு பணிக்கு வந்த வார்டன்களையும், பணி முடிந்து சென்ற வார்டன்களையும் வைத்து சிறையில் அதிரடி சோதனை நடத்தினார். ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சமையல் செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விறகு கட்டைகளை வைத்து சமையல் செய்யும் கைதிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் செல்போன், கஞ்சா எதுவும் பிடிபடவில்லை என டிஐஜி அறிவுடைநம்பி கூறினார். கைதிகளின் பேக்கரி கடை: ‘‘சேலம் மத்திய சிறையில் கைதிகளை கொண்டு பேக்கரி கடை திறக்க இருக்கிறோம். இதில் பிஸ்கட், பன்,  போன்ற அனைத்தும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் துவங்கும். கோவை சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் தேங்காய் எண்ெணய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்’’ என்றும் டிஐஜி அறிவுடைநம்பி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: