பணமதிப்பு ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை : கர்நாடக முதல்வர் குமாரசாமி

பெங்களூரு : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைப்பது பற்றி முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர். பெங்களூருவில் தேவகவுடா வீட்டில் நடந்த ஆலோசனையில் முதல்வர் குமாரசாமியும் பங்கேற்றார். ஆலோசனைக்கு பிறகு தேவகவுடா, சந்திரபாபு நாயுடு,முதல்வர் குமாரசாமி ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய குமாரசாமி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது என்றும் பணமதிப்பு ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை என்றும் கூறினார். மேலும் பெட்ரோல்விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது என்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73 ஆக சரிந்துவிட்டது என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: