பாகிஸ்தானின் அனைத்து வங்கிகளிலும் ஹேக்கிங் மூலம் தகவல்கள் திருட்டு...: பணப் பரிவர்த்தனைகள் முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹேக்கிங் மூலம் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் ராணுவ அதிகாரிகள் பெயரில் அவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய சைபர் அத்துமீறலாக இது கருதப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளின் தகவல்களும் களவாடப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு ஆபத்து நேரிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்களை களவாடிய இந்த கும்பல், இணையத்தில் அவற்றின் விவரங்களை வெளியிட்டதன் காரணமாக பாகிஸ்தான் வங்கிகள், சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கு தடை விதித்துள்ளன. மொபைல் பேங்கிங் சேவையும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை மறுத்துள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், ஒரு குறிப்பிட்ட வங்கியில் மட்டுமே பிரச்சனை எழுந்திருப்பதாகவும், மற்ற வங்கிகளில் பாதிப்பு இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து வங்கிகளின் உயரதிகாரிகளின் கூட்டம், ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: