மாநில ரேங்கிங் கேரம் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: மாநில அளவிலான  ரேங்கிங் கேரம் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.சென்னை டான் பாஸ்கோ இளைஞர் மையம், சென்னை  மாவட்ட கேரம் சங்கம்  இணைந்து நடத்தும் இந்த தொடர், சென்னை பிராட்வே டான் பாஸ்கோ இளைஞர் மையத்தில் இன்று முதல் நவ.11ம் தேதி வரை நடைபெறும். ஆண்கள், மகளிர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  யு16, யு18 மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒற்றையர், இரட்டையர்  பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. 500க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றும் 16 மேசைகளில் நடக்கும். வெற்றி பெறுபவர்களுக்கு, பிரிவுகளுக்கு ஏற்ப பொன் விழா கோப்பை, வைர விழா கோப்பை,  டான் பாஸ்கோ கோப்பை உட்பட பல்வேறு கோப்பைகள் வழங்கப்படும். தொடக்க விழாவில், முன்னாள் உலக சாம்பியனும் சென்னை மாவட்ட கேரம் சங்க பொதுச் செயலாளருமான மரிய இருதயம், காஸ்கோ இந்திய நிறுவனத்தின் நிர்வாகி உபைதுர் ரகுமான்,  இந்திரா புரஜக்ட்ஸ் நிறுவன நிர்வாகி ரத்தினபால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: