சேலம் சிறுமி படுகொலை கண்டித்து கலெக்டர் ஆபிஸ் அருகில் 9ம் தேதி ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தலவாபட்டி ஊராட்சி, மடம் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி மிகக் கோரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக தினேஷ்குமார் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கொடூரமான பாலியல் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் வரும் 9ம் தேதி காலை 10 மணி அளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: