போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி : போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ஆனது.போபர்ஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2005ல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி உயர்நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இந்துஜா சகோதரர்களுக்கு பங்கு இல்லை என்று கடந்த 2005-ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கு கடந்த வந்த பாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் ஆட்சியின் போது ராணுவத்துக்கு தேவையான 400, 155 எம்.எம் ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்க ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் ₹1,437 கோடிக்கு கடந்த 1986ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு போபர்ஸ் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ கடந்த 1990ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இந்துஜா சகோதரர்களுக்கு பங்கு இல்லை என்று கடந்த 2005-ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிபிஐ-யின் மேல்முறையீடு

இதை எதிர்த்து 12 ஆண்டுகளுக்கு பிறகு  கடந்த பிப்ரவரியில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது 4 ஆயிரம் நாட்களுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், மனுவை விசாரிக்க போவதில்லை எனக் கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

தீர்ப்பு வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மேல்முறையீட்டு செய்ய வேண்டும் என்ற விதியின்படி மேல்முறையீடு செய்ய சிபிஐ தவறி விட்டது.காங்கிரஸ் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டாக சிபிஐ மற்றும் பா.ஜ.,வால் கூறப்பட்டு வந்தது போபர்ஸ் முறைகேடு ஆகும்.இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குற்றவாளி இல்லை என 2014-ல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.கபூர் தீர்ப்பாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: