டெங்கு, பன்றிகாய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

வேளச்சேரி: தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம், நொச்சி செடி வழங்கும்  நிகழ்ச்சி வேளச்சேரி 100 அடி பைபாஸ் சாலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் லிங்க பெருமாள் தலைமை வகித்து, ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் 100 பேருக்கு நொச்சி ெசடிகள், 100 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். மேலும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவும் விதம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: