மத்திய அரசு நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா?

புதுடெல்லி: மத்திய அரசு நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யப்போவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் விலை வீழ்ச்சியை சமாளிப்பது, பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துவது, வட்டி விகித நிர்ணயம் உள்ளிட்ட 6 பிரச்சனைகளில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பாட்டுள்ளது. உச்சக்கட்டமாக சுதந்திர இந்தியாவில் முன்னேதும் இல்லாத வகையில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்த அரசியல் சட்டம் தரும் சிறப்புரிமையை பயன்படுத்தி மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்தது.

இதனால் அதிருப்தியடைந்த உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகவல் குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இறுதி முயற்சியாக வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடனான சந்திப்பின்போது சமாதானம் ஏற்படாவிட்டால் உர்ஜித் படேல் பதவி விலகுவார் என்று தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சலுகைகளை அறிவிக்க வசதியாக ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை தளர்க்குமாறு மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்பது புகார் ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: