மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜுலன் லோபெடிகுயி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த ரியல் மாட்ரிட் அணி, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுவென்டஸ் அணிக்கு மாறிய பிறகு திணறி வருகிறது. கடந்த ஜூன் மாதம் பயிற்சியாளர் ஜினடின் ஜிடேன் விலகியது மேலும் பின்னடைவை கொடுத்தது. ஜிடேனுக்கு பதிலாக ஜுலன் லோபெடிகுயி (52 வயது) பதவியேற்ற பின்னர் விளையாடிய 6 லா லிகா ஆட்டங்களில், ரியல் மாட்ரிட் 5 தோல்விகளை சந்தித்தது.