ரகானே 144*, இஷான் 114 ரன் விளாசல் தியோதர் டிராபி: இந்தியா சி சாம்பியன்: ஷ்ரேயாஸ் அதிரடி (148) வீண்

புதுடெல்லி: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா பி அணியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய- இந்தியா சி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா சி அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரகானே, இஷான் கிஷண்  இருவரும் அதிரடியாக விளையாடி இந்தியா பி அணி பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30.3 ஓவரில் 210 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.இஷான் 114 ரன் (87 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி உனத்காட் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த ஷுப்மான் கில் 26, சுரேஷ் ரெய்னா 1, சூரியகுமார் 39, விஜய் ஷங்கர் 4, வாஷிங்டன் சுந்தர் 6, சாய்னி 1 ரன்னில்  பெவிலியன் திரும்பினர். இந்தியா சி அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய ரகானே 144 ரன் (156 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா பி  பந்துவீச்சில் உனத்காட் 3, சாஹர், மார்கண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா பி களமிறங்கியது. ருதுராஜ் கெய்க்வாட், மயாங்க் அகர்வால் இருவரும் துரத்தலை தொடங்கினர். அகர்வால் 14 ரன்னில் வெளியேற, ஜெய்க்வாட் - கேப்ட ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தது. அரை சதம் அடித்த கெய்க்வாட் 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஹாரி 8, மனோஜ்  திவாரி 4, பெய்ன்ஸ் 37, கவுதம் 18 ரன்னில் வெளியேறினர்.ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 148 ரன் (114 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி சாஹர் பந்துவீச்சில் பப்பு ராய் வசம் பிடிபட, இந்தியா பி அணி போராட்டம் முடிவுக்கு  வந்தது. கடைசி கட்டத்தில் சாஹர் 21, நதீம் 1, உனத்காட் 3 ரன்னில் அணிவகுத்தனர்.

இந்தியா பி அணி 46.1 ஓவரில் 323 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா சி பந்துவீச்சில் பப்பு ராய் 3, நவ்தீப் சாய்னி, குர்பானி, விஜய் ஷங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.29 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா சி அணி 2018/19ம் ஆண்டுக்கான தியோதர் கோப்பையை கைப்பற்றியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: