டிடிவி தரப்பு மேல்முறையீடு செய்தால் தம்மிடம் கருத்து கேட்க வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் கேவியட் மனு

டெல்லி: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளும் கட்சி தரப்பை சேர்ந்த சபாநாயகர் தனபால் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க கோரி சபாநாயகர் தனபால் மனுதாக்கல் செய்துள்ளார். டிடிவி தரப்பு மேல்முறையீடு செய்தால், தனது தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டும் என சபாநாயகர் தனபால் தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில் கூறப்பட்டுள்ளது. 18 MLA-க்கள் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டால் அது குறித்து தன்னிடம் கருத்து கேட்காமல், எந்த முடிவும் எடுக்க வேண்டாம், தன்னையும் விசாரித்தே இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரியிருப்பதாக தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: