மக்கள் சேவகனாக இருப்பேன்: அசன் மவுலானா பிரசாரம்

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை 176வது வட்டத்துக்குட்பட்ட தாமோதரபுரம், அருணாச்சலபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, ஆல்காட் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து கை சின்னத்துக்கு தான் எங்கள் ஓட்டு என்று அசன் மவுலானாவை உற்சாகப்படுத்தினர். அப்ேபாது, அசன் மவுலானா பேசுகையில், ‘திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு தெருக்களிலும் உள்ள அடிப்படை பிரச்னைகளை கணக்கெடுத்துள்ளேன். அவற்றை சீரமைப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். உங்களுக்கு சேவை செய்யும் சேவகனாக வேளச்சேரி தொகுதியில் வலம் வருவேன். எனவே, கை சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்,’ என்றார்.  பிரசாரத்தில், திமுக பகுதி பொறுப்பாளர் துரை கபிலன், வட்ட செயலாளர் பெ.ராஜி, வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, ஸ்ரீகாந்த், பகுதி பொறுப்பாளர் ரவி கிருஷ்ணன், சுரேஷ், செல்வம், சின்னதம்பி உட்பட பலர் கலந்து கொண்டு கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர். …

The post மக்கள் சேவகனாக இருப்பேன்: அசன் மவுலானா பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: