2ம் நாளாக தேர்தல் ஆப்கானில் தாக்குதல்: 11 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் 2வது நாளாக நேற்றும் பல பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் ஆரம்பம் முதலே பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை அரங்கேற்றினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

காபூலில் நேற்று முன்தினம் வாக்குச்சாவடியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். பல இடங்களில் வாக்குச்சாவடிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நடக்கவில்லை.  அப்படிப்பட்ட 401 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருப்பினும், நங்கர்ஹார் மாகாணத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பாறுப்பேற்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: