புகைப்படத்தால் தொடங்கிய சர்ச்சை... : சபரிமலை தீர்ப்புக்கு முன்னும் பின்னும்

1990: திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரின் குடும்பத்தினர் அனைவரும் சபரிமலை கோயிலுக்குள் இருப்பது போன்ற புகைப்படம் நாளிதழ்களில் 1990ம் ஆண்டு வெளியானது. இதை அடிப்படையாக வைத்து, சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய தடை கோரி மகேந்திரன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1991, ஏப்.5: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, கேரள வரலாற்றில் அதுவரை சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என விவாதங்கள் எழுந்தன.

2006, ஆக.4: 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்க கோரி, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பாலின அடிப்படையில் கடவுளை வணங்கும் உரிமை முடிவு செய்யப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

2007, நவம்பர்:  சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரிய மனுவுக்கு ஆதரவாக, அப்போதைய கேரள அரசு (இடதுசாரி ஜனநாயக முன்னணி) பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

2016, ஜன. 11: ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

2016, பிப்.6: கேரளாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அருசு, பக்தர்களின் மத உணர்வுகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தது.

 2016 ஏப்.21: பெண்களை கோயிலுக்கு அனுதிக்க கோரி இந்து நவோத்தனா பிரதிஷ்டான், நாராயணசர்மா தபோவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2016 நவ.7: சபரிமலை கோயிலுக்குள் வயது பேதமின்றி பெண்களை அனுமதிக்க கோரி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

2017, அக்.13: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம்.

2017, ஜூலை 17: அரசியல் சாதன அமர்வு விசாரணை துவக்கியது.

 2018, செப்டம்பர் 28: 5 நீதிபதிகள் அமர்வில், 4 நீதிபதிகள் பெண்களை பாலின பாகுபாடு காட்டாமல், வயது பேதம் கருதாமல் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

அக்.1 : தீர்ப்பை தொடர்ந்து, ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கும்போது பெண்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும். ஆனால் தனி வரிசை கிடையாது என கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறு சீராவு மனு தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை என தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

அக்.2: தீர்ப்பை கண்டித்து, ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக பந்தளம் மன்னர் குடும்பம் அறிவித்தது. சட்ட ரீதியாக போராட உள்ளதாகவும் தெரிவித்தது.

அக்.3: சபரிமலையில் பெண்கள் அனுமதியை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என, கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.

அக்.5: தீர்ப்பை எதிர்த்து 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என அகில உலக தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் அறிவித்தது.

அக்.7: கேரள முதல்வர் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலைியல், சபரிமலையில் இளம்பெண்கள் தரிசன விவகாரத்தில் சமரச பேச்சுக்கு தயாராக இல்லை என தந்திரி குடும்பத்தினர், பந்தளம் அரண்மனை அறிவித்தது.

அக்.8: தீர்ப்புக்கு எதிராக, ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் புதிய சீராய்வு மனு தாக்கல். போராட்டம் வெடிக்கும் என பந்தளம் மன்னர் கேரள வர்ம ராஜா பேட்டி அளித்தார்.

அக்.9: சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

அக்.12: சபரிமலை விவகாரத்தில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. சபரிமலையில் பெண்களுக்கு செய்யப்பட்டு வரும் வசதிகள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 அக்.13: கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரி பந்தளம் மன்னர் குடும்பத்தின்ர தலைமை செயலகம் முன்பு போராட்டம்.

அக்.17: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்களை தடுக்க போராட்டக்காரர்கள் குவிந்தனர். நிலக்கல்லில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.  பம்பைக்கு பஸ்சில் வந்த 2 இளம்பெண்களையும், அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த 5 பெண்களையும் போராட்டக்காரர்கள் கீழே இறக்கினர்.  போராட்டம் வெடித்து கலவரமானதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அக்.18: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்.

அக்.19: சபரிமலைக்குள் நுழைய போலீஸ் பாதுகாப்புடன் வந்த 2 பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பினர். பெண்கள் நுழைந்தால் நடை சாத்தப்படும் என பந்தளம் மன்னர் எச்சரிக்கையால் பரபரப்பு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: