மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் 87வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை, புகழாரம்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.  ராமேஸ்வரத்தை சேர்ந்தவரான அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை அலங்கரித்தார். மென்மையான அணுகுமுறை, மாணவர்கள் மீதான பற்று, அறிவியல் மீதான மிகப்பெரிய நாட்டம் ஆகியவற்றின் மூலம் நாட்டு மக்களின் நினைவுகளில் அப்துல் கலாம் இன்னமும் வாழ்ந்து வருகிறார். அவரது 87வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் பல இடங்களில் அவரது படத்துக்கும், சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் அவரது  ேசவையை நினைவு கூர்ந்தனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “அப்துல் கலாம் ஒரு சிறந்த ஆசிரியர், அற்புதமாக ஊக்கமளிக்கும் நபர், விஞ்ஞானி, மிக சிறந்த ஜனாதிபதி. ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனங்களிலும் அவர் வாழ்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: